தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள் !

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 01:27 pm
elephants-invading-villages-looking-for-water

கோவை அருகே வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களை நோக்கி யானைகள்  உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங்கூட்டமாக வந்துள்ளன. குட்டி உள்ளிட்ட 9 யானைகள் கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து சென்றன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாபாததே யானைகள் கிரமங்களை நோக்கி வருவதற்கு காரணமென கூறும் பொதுமக்கள், போதியளவு தண்ணீரை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close