முதல்வரின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:30 am
attempt-to-rob-the-chief-minister-s-temple

முதலமைச்சர் பழனிசாமியின் குலத்தெய்வ கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் நசியனூரில் அப்பாத்தாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவில் ஆகும். இந்நிலையில், இன்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும், கோவில் உண்டியலை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், அதை உடைக்க முடியாமல் திரும்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேகோவிலில் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close