தங்கத்தை குச்சிகளாக மாற்றி நூதன கடத்தல்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 04:43 pm
gold-seized-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.00 லட்சம் மதிப்புடைய தங்க குச்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னை சேர்ந்த அமன் அர்ஷத்கான் என்பவர் தனது பைகளில் தங்கத்தை குச்சியாக வடிவமைத்து மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 254.300 கிராம் எடை கொண்ட 18 தங்க குச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close