சேலம்:  அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம்

  டேவிட்   | Last Modified : 05 Apr, 2019 07:10 am
awareness-dance-for-100-voting-in-salem

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

அதன்படி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நடன நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பிய அனைவரும் எந்த ஒரு நபர்களிடம் பணத்திற்காக எங்களின் ஓட்டை விற்க மாட்டோம், 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலுக்கு நடனமாடினர்.  மேலும் அனைவரும் தவறாமல் 100% வாக்களிக்க உறுதிமொழியினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வாசிக்க 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close