8 வழிச்சாலை வழக்கில் ஏப்.8ம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 10:25 am
8-way-road-judgement-on-april-8-by-madras-high-court

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கு எதிரான வழக்கில், வருகிற திங்கட்கிழமை (ஏப்ரல் 8ம் தேதி) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

இது தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் தொடங்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர். 

தொடர்ந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 8ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close