படுகாயமடைந்த மானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டே ஓட்டுநர்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 03:22 pm
injured-deer-rescue

ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

கோவை மாவட்டம் சின்னஜம்புஹண்டி குடியிருப்பு பகுதியில் பெண் மான் ஒன்று தெரு நாய்கள் தாக்கியதால் கழுத்து மற்றும் தொடை பகுதிகளில் படுகாயமடைந்து எழும்ப முடியாமல் கிடந்தது. இதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிங்கிரி, மானை மீட்டு உடனடியாக ஆனைகட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர், மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கோபனரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close