சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 03:22 pm
samayapuram-mariamman-temple-festival

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து பூக்கள் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடைபெற்றது. 

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பாக இன்று ஸ்ரீரங்கம் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூக்கள் மற்றும் பழங்கள் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

இதில் திருக்கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களை சாற்றி வழிபாடு செய்துவருகின்றனர். பூச்சொரிதல் விழா நிறைவடைவதையொட்டி வரும் 7ம்தேதி சித்திரை தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close