குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 03:26 pm
brother-was-killed-for-drunken-fight

முசிறி அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணணை, தம்பியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள தொட்டியம் தாலுகா, பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பார்த்திபன் (30) . இவர் குடிபோதையில் வீட்டிலிருந்த தாய் கௌரி மற்றும் தம்பி நவரசன் (27) ஆகியோரிடம் வீண் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தாய் கௌரியை வாழை இலை அறுக்கும் கத்தியால் காயப்படுத்தியுள்ளார்.

அப்போது கத்தியை பிடுங்குவதற்கு நவரசன் முயன்ற போது எதிர்பாராத விதமாக பார்த்திபனின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு போராடிய பார்த்திபனை அருகில் இருந்தவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொட்டியம் போலீசார் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நவரசனை கைதுசெய்து அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close