1.76 கோடி ரூபாய், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 09:30 pm
kovai-1-76-crore-rupees-has-ceased-by-officers

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1.76 கோடி ரூபாய் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, கோவை சங்கனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது சிங்காநல்லூர் வரதாராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், ஏடிஎம் -இல் பணம் நிரப்ப எடுத்து சென்ற வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படவிருந்த ஒரு கோடியே 76 இலட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாகனத்தில் இருந்த ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த காவலாளி சச்சின்குமாரிடம் இருந்து உரிமம் இல்லாத ரைபிள் மற்றும் ஐந்து தோட்டாக்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close