காங்கிரஸ் கட்சி மத நம்பிக்கை உடைய கட்சிதான் : கே,எஸ்.அழகிரி திடீர் பல்டி!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:18 am
k-s-azhagiri-speech-about-secular-coalition

"மதசார்பற்ற கூட்டணி என்பது வேறு நாத்திகம் என்பது வேறு" என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அழகிரி, " நீட் தேர்வு என்பது கோடிக்கணக்கான தமிழக இளைஞர்களின்  வாழ்க்கையில், ஒரு பெரிய சாபக்கேடாக இருந்தது. இந்தியா முழுவதும் ஒரே கல்வி பாடத்திட்டங்கள் இருந்தால்தான், தேர்வு ஒரே மாதிரியாக இருக்க முடியும். எனவே நீட் தேர்வு என்பது மாநிலங்கள் விரும்பினால் வைத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் தேவையில்லை என காங்கிரஸ் கட்சி மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது" என்றார். 

மேலும்,"தனி மனித உரிமையில் ஒரு அரசாங்கம் தலையிடக் கூடாது. கடவுள் நம்பிக்கை உள்ள மகாத்மா காந்தியே, 'நான் ஒரு உண்மையான இந்து. நான் ராமனுடைய பக்தன். ஆனால் என்னுடைய உணர்வை, நம்பிக்கையை பக்கத்து வீட்டுக்காரருக்கு திணிக்க மாட்டேன்' என்று கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன்பு கடடவுளை வணங்குகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் முட்டாள், காட்டுமிராண்டி என பெரியார் கூறினார். மதசார்பற்ற கூட்டணி என்பது வேறு, நாத்திகம் என்பது வேறு. 

" காங்கிரஸ் ஒரு மத நம்பிக்கையுள்ள, கடவுள் நம்பிக்கையுள்ள கட்சி. அதில், ஜவஹர்லால் நேரு போன்ற நாத்திகர் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆன்மீக உணர்வுடைய கட்சி என தெரிவித்தார்.  மேலும், எந்த மதத்தின் தீவிரவாதிகள் வந்தாலும், காங்கிரஸ் கட்சி அதை எதிர்க்கும். அதற்காக மதத்தை எதிர்ப்பதாக அர்த்தமில்லை" எனவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close