எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:59 am
rameswaram-fishermen-arrested

நெடுந்தீவு அருகே, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று, 562 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில், தங்கச்சிமடம், அந்தோணியார்புரத்தை சேர்ந்த அமலன், என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரெனிஸ்டன், முருகேஷன், முனியசாமி, சுப்பையா ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இன்று அதிகாலை, 2 மணியளவில் இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close