சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: எம்.ஜி.ஆர் பெயர் பலகை அமைக்கும் பணி தீவிரம்...

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 12:30 pm
m-g-r-name-board-setting-in-central-railway-station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பெயர் பலகை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கடந்த மார்ச் 6 ஆம் தேதி வண்டலூரை அடுத்த  கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி கட்சிகளின் பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். 

தமிழக அரசும் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அதனை உறுதிசெய்யும் விதமாக அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில்,  டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என திருத்தம் செய்து மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close