புழல் சிறை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 12:25 pm
puzhal-police-station-head-constable-suicide

புழல் சிறை தலைமை காவலர் சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருநெல்வேலி மாவட்டம் சிஞ்சன் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னை புழல் சிறையில் முதன்மை தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி 3 மகள்களை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மதுரவாயலில் உள்ள அவரது சகோதரர் விஜய் ஆனந்த்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், நேரில் பேச வேண்டும் எனவும், சிவக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து, விஜய் சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் சிவகுமார் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால், ஜன்னல் வழியாக விஜய் எட்டிப்பார்த்தபோது, சிவக்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close