பிரதமர் மோடி வருகையையொட்டி துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 02:07 pm
a-man-caught-with-a-gun-in-coimbatore

பிரதமர் மோடி இன்று கோவை வர உள்ள நிலையில், பீளமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் தங்கி இருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த போலீசார் விசாரணை செய்து பின்னர் விடுவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதையொட்டி, கோவை மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் தொடங்கி கொடிசியா, பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக, ஆங்காங்கே சோதனைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பீளமேடு ஜி.கே.டி. நகரில் உள்ள ஆர்.வி.ஆர் லாட்ஜில் நேற்று இரவு நேரத்தில் நடந்த சோதனையின்போது, இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் விசாரணை செய்ததில், அவர் பெயர் தரணிதரன் என்பதும், முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரரான அவர், தற்போது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 துப்பாக்கிகள் உரிமம் பெற்ற நிலையில் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை விசாரணை செய்த போலீசார் துப்பாக்கிகளை ஒப்படைத்து அனுப்பிவிட்டனர். பிரதமர் இன்று மாலை கோவை வரும் நிலையில், துப்பாக்கியுடன் ஒருவர் விடுதியில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close