வாக்கு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 07:05 pm
name-icon-fitting-in-voting-machine

வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி சேலத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள்  மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் வாக்கு இயந்திரத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று சேலம் தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ரோஹிணி நேரில் சென்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close