திமுக தலைவர் ராகுல் என கூறிய பாரிவேந்தர்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:30 pm
the-dmk-leader-rahul-said-parivendhar

திமுக தலைவர் ராகுல் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். 

திமுக கூட்டணி கட்சி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் வெங்கங்குடி,ஈச்சம்பட்டி, சமயபுரம், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார். கிராம பகுதிகளில்  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் வேனில் அமர்ந்தபடியே வாக்குகளை கேட்டார்.

அப்போது, நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு. எல்லா மதத்தினரும், இனத்தினரும் சேர்ந்து சம உரிமையோடு வாழலாம் என்பதே அரசியல் சட்டம். தாம் செய்த தவறால் ஒரு தவறான பிரதமரை தேர்ந்தெடுத்தனால் இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்கிறோம்.  இதையெல்லாம் மனதில் வைத்து வருகின்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எ ன கூறினார்.

மக்களின் உணவு, பழக்க வழக்கங்களை மாற்றிய பாரத பிரதமர் மோடியின் ஆட்சிக்கு (காங்கிரஸ் என்பதற்கு பதில்) திமுக தலைவர் ராகுல்காந்தி முற்றுப்புள்ளி வைப்பார் என்றும், ராகுல்காந்தி எடுக்கும் முடிவுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார்  எனவும் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close