சமரச தீர்வு மையத்தின் 14வது ஆண்டு விழா!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:16 pm
14th-anniversary-of-the-compromises-settlement-center

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தீர்வுமையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு பொதுமக்களுக்கு வழங்கினார்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையங்கள் மூலமாக சமூகத்தீர்வு காணச்செய்வதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச தீர்வு மையத்தின் 14வது ஆண்டு விழாவையொட்டி, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்தில் எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி குமரகுரு, நீதிமன்ற வழக்குகளை குறைப்பதற்காக தீர்வு மையம் உதவுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தீர்வு மையத்தில் 27வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 13 சமரச தீர்ப்பாளர்கள் உள்ளார்கள் என்றும், ஒரு வார காலத்திற்கு செயல்படும் இந்த சமரச தீர்வு மையத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், விட்டுக்கொடுத்து செல்வதால் சமுதாயம் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும். அமைதியையும், அன்பையும் ஏற்படுத்தி தரும் எனவும் கூறினார். 

தொடர்ந்து சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அணுகும் முறை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு பொதுமக்களுக்கு வழங்கினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close