பிரதமருக்கு கூட்டு களவாணி முதல்வர் : சீத்தாராம் யெச்சூரி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:06 am
seetharam-yechury-campaign

பிரதமர் மோடிக்கு கூட்டு களவாணியாக தமிழக முதல்வர் பழனிசாமி இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் . சு.வெங்கடேசனை ஆதரித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாக்கு சேகரித்தார். 

கூட்டத்தில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, கடந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக அரசு  அனைத்து  மக்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வந்திருப்பாதாக கூறினார்.  பா.ஜ.க ஆட்சியில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்,  இளைஞர்களுக்கு 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். ஆனால், இளைஞர்கள் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. 

பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ரபேல் விமான ஊழலில்  அம்பானிக்கு விமான ஒப்பந்தத்தை  வழங்க பிரதம அமைச்சகம் எந்த அளவுக்கு உழைத்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கமிசனை பெற தான் இந்த 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் சென்னை சேலம் 8 வழி சாலை வழக்கில் சரியான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம்  வழங்கியுள்ளது. 

கடந்த 5 வருடங்களாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார். இவருக்கு கூட்டு களவாணியாக இருப்பவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி எனவே தமிழக மக்கள் கவனமாக இருங்கள் இந்த களவாணிகளை விரட்டுங்கள் என கூறினார்.

முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் பேசுகையில்,  டாக்டர்.ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் நாடி பிடித்து நோய் என்னவென்றே கண்டுபிடிக்க கூடிய டாக்டர்கள். தற்போது, அவர்களுக்கு என்ன நோய் வந்திருக்கு என்று கண்டறிய வேண்டிய நிலை நமக்கு வந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் மீது ஹைதராபாத் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக 300 கோடி வாங்கினார் என்ற வழக்கு வாய்தாவில் போய்க் கொண்டிருக்கிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அந்த வழக்கு இல்லாமல் போய்விடும். அதற்காகத்தான் அவர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். நாம் இங்கு கொள்கை அடிப்படையில் தான் கூடியிருக்கிறோம். இந்த நாட்டை மீட்க வேண்டும் தமிழ் நாட்டையும் காக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மனிதர்களாக வாழவேண்டும் என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close