போக்குவரத்து காவலர் மீது வாகனத்தை மோதிவிட்டு சென்ற நபர் குட்காவுடன் பிடிபட்டார்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:47 am
one-man-arrested-for-having-gutka

போக்குவரத்து உதவி ஆய்வாளரை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்ததில் தடை செய்யப்பட்ட குட்கா பிடிப்பட்டது. 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒருவர், உதவி ஆய்வாளர் கண்ணன்  மீது வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் தப்பிக்க முற்பட்டுள்ளார். இதில்  அவரது இடது கையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதைகண்ட அருகில் இருந்த மற்றொரு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுடலைமணி அந்த நபரை சாதுர்யமாக மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் பெயர் ஜிதேந்திர குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 2 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close