திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:56 am
foreign-money-and-gold-seized-at-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்புடைய தங்க நகை மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமான பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவர் ரூ.1.75 லட்சம் இந்திய மதிப்புடைய 2 ஆயிரம் பவுண்ட் வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக அபுதாஹிரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, திருவாரூரைச் சேர்ந்த ஜமீனா பேகம் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய 499 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close