ஹோட்டலில் ரூ.50 லட்சம் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 11:14 am
rs-50-lakh-worth-of-counterfeit-notes-in-the-hotel

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நபரிடம் இருந்து ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை எழும்பூரில் உள்ள லட்சுமி லாட்ஜில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தலைமை செயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.  

அப்பொழுது அங்கு தங்கியிருந்த ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close