காவிரி, கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்: முதலமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 01:58 pm
cauvery-godavari-water-supply-project-will-be-upgraded-at-rs-60-000-crore-chief-minister

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி, கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில்  ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.ஆர் சிவபதியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். 

15 ஆண்டுகளாக மத்தியில் பதவி வகித்த திமுக - காங்கிரஸ் கூட்டணி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றும் சட்டம், ஒழுங்கு சரியில்லை என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், 5 வருடம் துணை முதல்வராக இருந்த போது மதுரைக்கு செல்லாமல் தற்போது, மதுரைக்கு சென்று நடைப்பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார். 

இந்தப் பகுதி விவசாய பெருமக்களை சார்ந்நிருப்பதால் 3000 ஏரி, குளங்களை தூர் வாரி நிலத்தடி நீர் சேமிக்கப்படும் என்றும், ரூ.2000 கோடியில் சென்னையில் உணவு தானிய பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி வேண்டும் என பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close