நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்த காவலர்கள்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 03:07 pm
police-officers-are-voted-with-interest

திருச்சியில், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் நீண்ட வரிசையில் நின்று தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஒரேகட்டமாக நாடாளுமன்றதேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தமிழக காவல்துறையினர், சிஆர்பிஎப் மற்றும் மத்திய தொழில் ராணுவத்தினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஆகையால் தேர்தல்பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால்;மூலம் வாக்களிக்க மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமணமண்டபத்தில் இன்றும் நாளையும் 2நாட்கள் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காலை 10மணிக்கு தொடங்கும் தபால் வாக்குப்பதிவு மாலை 5மணிவரை நடைபெறுகிறது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1720 மாநகர காவல்துறை அலுவலர்கள் இன்றையதினமும், மாவட்ட ஊரக பகுதியில் தேர்தல் பணிபுரியும் 1038காவலர்துறை அலுவலர்கள் நாளையும் என 2ஆயிரத்து 758பேர் வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவராசு தபால் வாக்குப்பதிவுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இதில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களுக்கு படிவம்(16)786 படிவத்தினை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close