அரசு பள்ளிக்காக தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 03:23 pm
people-ignore-the-elections-for-government-school

அமைச்சர் வளர்மதியின் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கே.பெரியபட்டி அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள கே.பெரியபட்டி அமைச்சர் வளர்மதியின் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கே.பெரியபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான தொகையும் கல்வித்துறையிடம் செலுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு பள்ளி தரம் உயர்த்தப்படும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதைக்கண்டித்து அந்த பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் தரம் உயர்த்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து அதற்கான விளம்பர பதாகைகளை ஊரில் வைத்துள்ளனர்.

கே.பெரியபட்டி, பெரியபட்டி புதூர், சின்னபெரியபட்டி, அணைக்கருப்ப கோவில்பட்டி, சீத்தப்பட்டி, மொண்டிப்பட்டி, ஆகிய பல்வேறு பகுதி மக்களின் பிரதான கோரிக்கையான அரசு பள்ளியை தரம் உயர்த்தினால் மட்டுமே வாக்களிப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close