வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் ஆதரவு கேட்ட வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 04:01 pm
candidate-to-ask-for-support-at-polling-place

வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை மக்களவை தொகுதியில் காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது, இதில் மேலூர், மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் காவல்துறையினர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனி தனியே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு பதிவு நடைபெறும் கல்லூரி வளாகத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆதரவு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட தேர்தல் அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பி வைத்தனர். 

இதைதொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை தபால் வாக்கு பதிவை பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தபால் வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது தேர்தல் விதிமுறை மீறல் எனவும், அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவித்த அவர், காவல்துறையினர் மனசாட்சிப்படி வாக்கு அளித்து வருவதாக கூறினார்,

மேலும், வாக்கு பதிவு நடைபெறும் இடைத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் காவல்துறையினரின் வாக்குகள் பெறப்படுவதாக தெரிவித்தார். மேலும், வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close