9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தை கைது!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 04:03 pm
9-year-old-girl-sexually-abused-adoptive-father-arrested

பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கொள்ளு பாளையம் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு சிறுமி பள்ளியில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதைக் கண்ட பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்ததில், அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.  

இதையடுத்து, அரசு பள்ளியின் மூலம் கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் பரமசிவத்தின் மீது பாக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பரமசிவத்தை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில், தொப்பம்பட்டி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டு இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close