வாகன சோதனையில் மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் !

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:23 pm
82-liquor-packets-are-seized-during-vehicle-testing

நெல்லை மக்களவைத் தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது காரில் கடத்திவரப்பட்ட  82 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
நெல்லை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர், தாசில்தார் முருகேசன் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது நெல்லையில் இருந்து அவ்வழியாக மருதமுத்தூர்க்கு சென்று கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது அந்த காருக்குள் 2 பைகள் நிறைய 82 மதுபான பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.  அதனையடுத்து, உடனடியாக பறக்கும் படையினர் அந்த மதுபானங்களை கைப்பற்றி, நெல்லை டவுன் காவல் நிலைய மதுவிலக்கு பிரிவில் ஒப்படைத்தனர்.மேலும் மாதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்த சுரேஷ் என்பவரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close