கட்சியிலிருந்து விலகுகிறேன்: பாமக துணைத் தலைவர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:08 pm
pmk-is-a-family-party-and-i-am-leaving-the-party

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, பாமக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர், கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

திராவிட அரசியலுக்கு மாற்று என பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்னதை நம்பி கட்சியில் இணைந்தேன். திராவிட கட்சிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற அன்புமணி ராமதாசால் முடியுமெனவும் நம்பினேன்.

திராவிட கட்சிளுக்கு மாற்று பாமக தான் ராமதாஸ் என்று கூறி வந்ததுடன்,  அக்கட்சிகளை கடுமையாக  விமர்சனமும் செய்து வந்தார். ஆனால், தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் என்று மணிகண்டன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close