சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 08:51 am
sarangapani-temple-festival

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில்108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக போற்றக்கூடியதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமாகும்.  இத்திருக்கோவிலில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர், திருவாபுராணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது.

இருகரத்துடன் எழந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ ஆராவமுதனை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை நாற்றோளெந்தாய் என்றும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தமையால் இத்திருத்தலம் உபயப்ரதான திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், சாரங்கபாணி ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் காலை மற்றும் மாலையில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவியுடன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close