அமமுக நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய அதிமுகவினர்: தஞ்சையில் பதற்றம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 10:06 am
the-aiadmk-administrators-attacked-the-ammk-administratior

தஞ்சையில் அமமுக நிர்வாகியை வீடு புகுந்து அதிமுகவினர் தாக்கியதால் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையில் அமமுக நிர்வாகி சத்திய மூர்த்தியை அதிமுகவில் இணையும் படி அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சத்திய மூர்த்தி மறுப்பு தெரிவித்ததால், நள்ளிரவு அவரது வீடு புகுந்த அதிமுக நிர்வாகிகளை அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் சத்திய மூர்த்தி பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுக கிளை செயலாளர் சரவணன் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமமுகவினர் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காவல்நிலையத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

நள்ளிரவில் அதிமுகவினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close