கதை பேசி வாக்கு சேகரிக்கும் மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 10:48 am
mk-stalin-speaks-the-story-for-collect-vote-chief-minister

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை பற்றி பேசாமல், கதை பேசி வாக்கு சேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை பற்றி பேசாமல், கதை பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

மேலும், கொங்கு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை  பதவி ஆசை காரணமாக திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டதாகவும் கூறினார். நீர் மேலாண்மை திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தும் என்றும், ராசிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றும், ராசிபுரம் புறவழிச்சாலை திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். தமிழகத்தில் அதிமுக அரசு தொடர்ந்தால் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close