மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:28 pm
100-vote-awareness

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க வலியுறுத்தி  தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த உறுதிமொழியினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி வாசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 100% அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என கையெழுத்திட்டனர்.

மேலும் வாக்குப்பதிவின் போது மாற்று திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல 1000க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் இன்று சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இந்த நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close