மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 02:27 pm
7-layer-security-for-madurai-airport

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் வரும் ஏப். 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரையில் நாளை மாலை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி திமுக மற்றும் அதன்  கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மற்றும் பொது கூட்டம் மேற்கொள்ள இருக்கிறார். 

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை முதல் 5 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் மிக கவனமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விமானத்தில் செல்லும் பயணிகள்  அனைவரும் சோதனைக்கு பின்னரே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.  எனவே மதுரை விமானநிலையத்தை பயன்படுத்த உள்ள பயணிகள்,  சற்று முன்னதாகவே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close