வளர்ச்சியடைந்த தொகுதியாக தேனியை மாற்றுவேன்: வேட்பாளர் ரவீந்திரநாத்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:19 pm
election-campaign-in-theni

தமிழக அளவில் வளர்ச்சியடைந்த தொகுதியாக தேனியை மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மதுரை மாவட்டம் தேனூர் ,சமயநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார், அவருடன் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், உங்களில் ஒருவனாக இருந்து 100 சதவீத அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் தேனி தொகுதியை தமிழக அளவில் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் எனவும் தெரிவித்தார். மேலும், பல சூழ்ச்சிகளை கடந்து அ.தி.மு.கவிற்கு மக்கள் செல்வாக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close