சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா, மகள்கள் ஆர்த்தி மற்றும் ஆசிகா ஆகியோருடன் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். இன்று காலை அந்த அறையில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது, விஜயகுமார் அவரது மனைவி மற்றும் ஒரு மகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். ஆர்த்தி என்பவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக் கண்ட விடுதி ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in