திருநாவுக்கரசுக்கு ஓட்டு போடவேண்டாம் என காலணியை துடைத்து நூதன பிரச்சாரம் !

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:52 pm
a-women-campaign-with-wipe-the-shoe

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுகரசுக்கு ஓட்டுபோட வேண்டாம் என ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை துடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நர்மதா என்ற பெண், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை வாங்கி துடைத்து விட்டு, திருநாவுக்கரசு சென்னையில் ரவுடியாக இருந்து வருகிறார், எனவே அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு வந்த காங்கிரசாருக்கும் நர்மதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் நர்மதாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  இதை அறிந்த தேமுதிக, பாஜக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயகுமார் வீட்டில் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close