வருமான வரித்துறை சோதனை: நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 06:00 pm
nellai-district-election-officer-interviewed

நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து  பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; தென்காசி, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 324  தேர்தல் நுண் பார்வையாளர்கள் உள்ளனரெனவும், மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 73,081 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும்,  இதில் 55,305 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அந்த வாக்காளர் அடையாள அட்டை இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், நெல்லை மாவட்டத்தில் இரண்டு வருமான வரித்துறை குழுக்கள் வீடுகள், கட்டிடங்களில் பணம், பொருட்கள் இருப்பது தொடர்பான, புகார் அடிப்படையில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close