குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:01 pm
public-road-stroke

திருச்சியில், ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் இன்றி  அவதிக்கு ஆளாகி வரும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன்  இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் முறையான காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின் மோட்டாரிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளாகி வந்த  அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம்  இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் இன்று மாலை, காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து,  மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close