அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் வருமானவரி சோதனை: ரூ.50 லட்சம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 08:45 am
income-tax-raid-in-admk-union-secretary-home

திருச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ 50 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடியைச் சேர்ந்தவர் சேது. அதிமுகவைச் சேர்ந்த இவர் வையம்பட்டி ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மனைவி கல்பனா முன்னாள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்தவர். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.50 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக ஒனறியச் செயலாளர் சேது மும்முரமாக பணியாற்றி வரும் நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே சேது தனது மனைவி கல்பனா, அவரது அண்ணன் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருவதாகவும் அவர்கள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் எடுத்துள்ள ஒப்பந்தபணிகள் முடிந்ததை அடுத்து இரண்டு ரசீதுக்கான தொகை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, அந்த பணத்தை தான் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகவும் அதற்கான ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கல்பனாவை விசாரணைக்கு வரும் படி வருமான வரித் துறையினர் கூறி சென்றதாக தெரிகிறது. .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close