திமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... 

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 01:28 pm
petrol-bombing-on-dmk-area-secretary-car

திமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

திமுகவின் அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம். இவர் நேற்று மத்திய சென்னைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் தெஹலான் பாகவியை ஆதரித்து அமமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு டி.பி.சத்திரத்தில் உள்ள பரமசிவம் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். 

இதில், கார் சேதமடைந்தது. சத்தம் கேட்டு பரமசிவம் வெளியே வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். அதிகாலை வேளையில் திமுக பிரமுகர், வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close