வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடைபெறுகிறது: தயாநிதிமாறன்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 09:46 am
obviously-the-money-are-taking-place-dayanidhi-maran

அதிமுக கூட்டணி கட்சியினர், வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதற்கு காவல்துறையினர் உடந்தையாக  இருப்பதாகவும், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம் மற்றும் பாதிப்பை பார்வையிட்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், "நேற்று இரவு அமமுக கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். திமுகவினர் ஜனநாயக முறையில் இது தவறு என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து அந்த பிரச்னை வேறு மாதிரி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இன்று காலை 5 மணிக்கு பரமசிவம் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளோம். வெளிமாவட்டத்தை சேர்ந்த பலரும் இங்கு முகாமிட்டு இருக்கின்றனர். குறிப்பாக பா.ம.க.கட்சியினர் அதிக அளவில் தங்கியுள்ளனர்.

பா.ம.கவினரும் இதுபோன்ற செயல்கள செய்யக்கூடியவர்கள். வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடக்கின்றது அதற்கு காவல்துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது என்பது வேதனை அளிக்கின்றது. இது குறித்த தகவல்களை காவல்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க இருக்கின்றோம்." என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close