பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 12:05 pm
income-tax-raid-in-psk-construction

சென்னையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் உள்ள பி.எஸ்.கே கட்டுமான நிறுவனம் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறையினருக்க ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் நாமக்கலில் உள்ள பி.எஸ்.கே நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும், பைனான்சியர் ஆகாஷ் பாஸ்கரன், சுஜாய் ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், சென்னை, நெல்லையில் உள்ள பைனான்சியர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close