முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 10:55 am
the-full-capacity-reached-the-veeranam-lake

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கடலூர் வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. 

கோடை வெயில் காரணமாக கடந்த 2 மாதமாக வீராணம் ஏரி நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நிலவியது. இதையெட்டி மேட்டூர் அணையில் இருந்து கீழணைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 7-ம் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது.

இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர்  அனுப்பப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close