ரூ.7.5 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 01:24 pm
gutka-seized-in-tirchy

திருச்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி பழைய பால்பண்ணை அருகே திருச்சி கிழக்கு வட்டாச்சியர் ரேணுகா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஓசூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அந்த லாரியில் 50 மூட்டைகளில் ரூ.7.5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.  

இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர். மேலும் லாரி ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close