தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 01:38 pm
tamils-need-to-rule-tamil-nadu-rahul-gandhi

தமிழகம் தமிழர்களால் ஆளப்படவேண்டும் என்றும் நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல், " இந்தியா மொழி, இனம் கடந்த மதசார்பற்ற நாடு என்றும் தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், மொழி மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார். பல மொழிகள் மற்றும் கலாச்சாரத்திற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிப்பதால் தோழமை கட்சிகளுடன் கைகோர்த்துள்ளோம். 

தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கபடவில்லை. அதை நாம் கேட்க வைக்க வேண்டும். அதிமுக அரசை கட்டுபடுத்த முடியும் என்பதால், அதன் மூலம் தமிழக மக்களையும் கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மோடி நினைக்கிறார். 

நீரவ் மோடிக்கு ரூ.35,000 கோடியும் மல்லையாவுற்கு ரூ.10,000 கோடியும் கடன் கொடுத்த பிரதமர் மோடி, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறவில்லை. வசதிபடைத்தவர்கள் கடன் பெற்றுகொண்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால், ஏழை விவசாயிகள் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாமல் சிறை செல்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

2019ம் ஆண்டில் இருந்து எந்த விவசாயிகளும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக சிறையில் இருக்கமாட்டார்கள். உண்மையான ஏழைகளை கண்டறிந்து அவர்களின் வங்கி கணக்கில் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.72000 செலுத்தப்படும். விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தை காங்கிரஸ் அரசு போக்கும். விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 

பிரதமர் நரேந்திர மோடி கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ரூ.15 லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறிய பிரதமர் மோடி, பணமதிப்பிழக்க செய்து ஒவ்வொருவரையும் வங்கி முன்பு காத்திருக்கவைத்தார். ஜி.எஸ்.டி வரியால் தொழில் துறை பாதிக்கப்பட்டது. 

இந்தியாவில் தமிழர்களின் குரல் மத்தியல் கேட்கப்படவில்லை. தமிழர்களின் வரலாற்றை படித்துப் பார்த்தால் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்வார். தமிழகம் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும். நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழர்களுக்கும் எனக்கும் அரசியல் உறவு இல்லை, உணர்வு பூர்வமான உறவு உள்ளது. என்னை நேசத்தோடும், பாசத்தோடும் கவனித்துக்கொள்ளும் தமிழக மக்களுக்கு நன்றி என கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close