நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர்கள்: நடிகர் சமுத்திரக்கனி

  அனிதா   | Last Modified : 12 Apr, 2019 03:30 pm
do-not-vote-for-nota-actor-samuthirakani

நோட்டாவிற்கு ஓட்டு போடுவதால் எந்த பயனும் இல்லை என திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கூறியுள்ளார். 

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து திரைப்பட நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., எழுத்தாளர் சு.வெங்கடேஷ் என்னுடைய நண்பர் என்ற முறையில் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். காவல் கோட்டம் மூலமாக மதுரையின் வரலாற்றை கூறியவர். 

மக்கள் பிரச்சனையை மக்கள் கூடவே இருந்து தீர்வுகாணும் எளிமையான ஒரு மனிதன். பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிகாண முடியாது உண்மை, நேர்மை இருக்க வேண்டும். எவ்வளவு பண வேட்டைகள் நடைபெற்றாலும் அதையெல்லாம் கடந்து சு.வெங்கடேஷ் வெற்றி பெறுவார்.

கண்டிப்பாக இளம் தலைமுறைகள் அரசியலுக்கு வருவார்கள் அதற்கு ஜல்லிக்கட்டு ஒன்றே எடுத்துக்காட்டு., முதல் வாக்காளர்கள் தேசத்தை மாற்றக்கூடிய ஒரு இடத்தில் உள்ளனர். அதேபோல், நோட்டாவிற்கு ஓட்டுப் போடுவதால் எந்த ஒரு பயனும் கிடையாது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close