மக்கள் ஆதரவு இல்லாத வேட்பாளர்: சிறுவர்களை வைத்து பிரச்சாரம்!

  அனிதா   | Last Modified : 12 Apr, 2019 04:06 pm
not-a-people-supported-candidate-campaign-with-children

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிறுவர்களை வைத்து ஆபத்தான முறையில் பிரச்சாரம் செய்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலும் நிலக்கோட்டையில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இம்மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிலக்கோட்டையில் அமமுக சார்பில் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யபட்ட ஆர்.தங்கத்துரையையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லாத நிலையே உள்ளது.

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு தன்னுடன் யாரும் வராததாலும், தொகுதி மக்களும் தொடர்ந்து புறக்கணிப்பதாலும், பள்ளியில் படிக்கும் சிறுவர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. வாகனத்தின் பின் பகுதியில் சிறுவர்களை உயிருக்கு ஆபத்தான முறையில் தொங்கவிட்டு கொண்டு செல்வது அப்பகுதி மக்களிடையே மேலும் எதிர்ப்பை ஏற்படுத்திவருகிறது. 

இதனை தேர்தல் கண்காணிப்பாளர்களோ, காவல்துறையினரோ கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close