கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 09:45 am
3-people-arrested-for-kanja-sale

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.  இதையடுத்து, குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமாரின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

கோவை, சேலம், விழுப்புரம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் வின்சென்ட், மார்ட்டின் ராபர்ட், காவல் ஆய்வாளர்கள் மணிவர்மன், சுதா ஆகியோர் தலைமையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறுமுகை, காரமடை, கல்லாறு, வனக்கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக அதிரடி  சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கிட்டான், சக்தி செல்வம், மூர்த்தி ஆகியோரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close