அதிமுகவின் தேர்தல் அறிக்கை உண்மையானது: கார்த்திக்

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 10:33 am
the-election-statement-of-the-admk-is-true-karthik

அதிமுகவின் தேர்தல் அறிக்கை உண்மையான தேர்தல் அறிக்கை என நடிகரும் மக்கள் உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து மக்கள் உரிமை காக்கும் கட்சியின் தலைவர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், " நம்முடைய வெற்றி வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன். 

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிகள் பின்னர் அதை நிறைவேற்றுவதில்லை. ஆகவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அவர்களை அடுத்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்க  வேண்டும்.  

அப்பொழுதுதான் மக்களுக்கு உண்மையான தேர்தல் அறிக்கை வரும். இந்த நேரத்தில் நான் பெருமையாக சொல்லிக் கொள்வது அதிமுக தேர்தல் அறிக்கை உண்மையான தேர்தல் அறிக்கை புரட்சித்தலைவரின் இயக்கம், அம்மாவின் வழிநடத்தலில் வந்த இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும் உண்மை சத்தியம் இருக்குமிடத்தில் கார்த்திக் இருப்பான் என்று தெரிவித்தார்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close