அவப்பெயர் ஏற்படுத்தவே வருமான வரி சோதனை: பிரபல போட்டோ நிறுவனம்

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 11:06 am
income-tax-raid-in-photo-studio

போட்டோ கிராபி நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை திருச்சி சாலையில் உள்ள ஜிரோ கிராவிட்டி போட்டோ கிராபி என்ற தனியாருக்கு சொந்தமான புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கோவை உட்பட நான்கு இடங்கள் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணம் பதுக்கி வைக்கப்படிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினருடன் சோதனை செய்தனர்.

காலை 11 மணி அளவில் இரண்டு வாகனங்களில் வந்த 7 வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.  

சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அஜய், "கடந்த வாரம் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர்கள் தான் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்று தவறான தகவலை பரப்பு உள்ளதாகவும் கூறினார்.

சோதனையின் காரணமாக தங்களது வேலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிய அவர், தங்களது நிறுவனத்தில் இருந்து எந்தவித, ஆவணமும், பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை எனவும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close